• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..,

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரும் ஆகஸ்ட் 7, 8 விருதுநகர் மாவட்டத்திற்கு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை வரவேற்பது தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இதில் கழக தலைமை நிலைய செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு சிறப்பாற்றினார்.

இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசுகையில்,

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியரின் சுற்றுப்பயணத்திற்கு பொதுமக்கள் எழுச்சியுடன் வரவேற்பு தருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும், நான்கரை வருடமாக திமுக எந்த வித திட்டங்களையும் செய்யாமல் விளம்பரத்தை மட்டுமே வைத்து ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

புரட்சித் தமிழர் எடப்பாடியர் செல்லும் எல்லா இடங்களிலும் மக்கள் திரண்டு வந்து திமுக ஆட்சி எப்பொழுது போகும் எடப்பாடியார் ஆட்சி எப்போது வரும் என தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆட்சி மாற்றத்திற்கு இக்கூட்டமே சாட்சி வரும் 2026 தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி யார் முதலமைச்சராக வருவார் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் விஜயகுமரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.