சிவகங்கை அருகே உள்ள கீழக் கண்டனியில் சீதையம்மாள் தனியார் பாலிடெக்னிக்கில் 1992 முதல் 1995 வரை 240 மாணவர்கள் பயின்றனர். அவர்கள் தற்போது சிவகங்கை, திருவண்ணாமலை, தேனி, இராமநாதபுரம், திருச்சி, நாகப்பட்டினம், மதுரை ,கோயமுத்தூர்,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் துபாய் அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்த மாணவர்கள் வாட்ஸ்ஆப் குழு மூலம் ஒருங்கிணைந்த அவர்கள், 29 ஆண்டுகளுக்கு பிறகு, ஒன்றிணைந்து தங்களது பழைய நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் ஒன்றிணைந்த மாணவர்கள் அனைவரும் தனியார் அறக்கட்டளை தொடங்கி ஏழை எளிய மாணவர்களை தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு மூன்று குழந்தைகளை படிக்க வைப்பதாகவும் தீர்மானித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பூமிநாதன், சுப்பையா, குணசேகரன் உள்ளிட்டோர் இன்று மாலை சுமார் 4 மணி வரை கலந்து கொண்டனர்.
