வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இருந்து குமரி மாவட்ட முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சுரேஷ் ராஜன் 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் தி மு க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆன அமைச்சரவையில், முதல்முறை சட்டமன்ற உறுப்பினர் என்றபோதும். திமுக இளைஞர் அணி தலைவர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையில் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு சுரேஷ் ராஜன் சுற்றுலா துறையின் அமைச்சராக பதவி ஏற்றார்.
குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை 2002-ம் ஆண்டு சுரேஷ் ராஜன் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.17லட்சத்து 20 ஆயிரத்து 916 மதிப்பில் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்தது, அன்று மாவட்டம் முழுவதும் மக்கள் மத்தியில் ஒரு பேசும் பொருளாக, மக்கள் கூடும் இடங்களில் ஒரு பட்டி மன்றம் விவாதம் போல் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுரேஷ் ராஜன் மீது நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு வராத நிலையில். திமுக தலைமை 2016, 2021-சட்டமன்ற தேர்தல்களில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை கொடுத்ததில், 2016 தேர்தலில் வெற்றி பெற்ற சுரேஷ் ராஜன் 2021-தேர்தலில் பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தியிடம் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் 10ஆண்டுகள் தொடர்ந்த அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த ஆட்சியில், சுரேஷ்ராஜன் வெற்றி பெற்றிருந்தால் அமைச்சர் பதவியை பெற்றிருப்பார் என்ற பேச்சு குமரி மக்களின் மத்தியில் பேசு பொருளாக உலாவந்தது.
சட்டமன்ற தேர்தலுக்கு பின் வந்த உள்ளாட்சி தேர்தலில். நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட மகேஷக்கு எதிராக, கிழக்கு மாவட்ட செயலாளரான சுரேஷ் ராஜன் காய் நகர்த்துகிறார் என திமுகவின் ஒரு சாரார்கள் கருத்து தெரிவித்த நிலையில் வார்டு தேர்தலில் வெற்றி பெற்ற மகேஷ் வெற்றி பெற்று மேயருக்கான தேர்தல் திமுகவின் மகேஷ், பாஜகவின் மீனதேவ்க்கு இடையே நடந்த தேர்தலிலும், சுரேஷ் ராஜன் ஈடுபட்டார் என திமுகவின் பார்வையாளர் பூச்சி முருகன் கட்சி தலைமைக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில். குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த சுரேஷ் ராஜன் கட்சி தலமையால் அகற்றப்பட்டு. மேயர் பதவி ஏற்ற நாளிலே, மகேஷ் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் ஆனார். இந்த மாற்றம். தமிழகம் முழுவதும் தி மு க வினரின் கண்கள் வியந்து பார்த்தது.!
சட்டமன்ற தேர்தலில் குமரி மாவட்டத்தில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றதால் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற மனோ தங்கராஜ் அமைச்சராக பதவி பெற்றார். குமரி தி மு க வில் இரண்டு மாவட்ட செயலாளர்களும் ஒரே கோஷ்ட்டியில் இருந்த நிலையில். சுரேஷ் ராஜன் தனிமை படுத்தப்பட்டார்.!?
கால ஓட்டத்தில் எதிர் பாராத வகையில் அமைச்சர் பதவியில் இருந்து மனோதங்கராஜ் அகற்றப்பட்டதுடன், மாவட்ட அமைச்சர் என்ற நிலையும் இல்லாது போனது. இந்த நிலையில் சுரேஷ் ராஜனும், மனோ தங்கராஜும் ஒரே அணியாக ஆன நிலையில். மேயரும், கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் ஆதரவாளர்கள் என ஒரு தனிக் குழு குமரி மாவட்டத்தில் உருவாகியது திமுகவினர் மத்தியில்.
சுரேஷ் ராஜன் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் சுரேஷ் ராஜன், இவரது பெற்றோர்கள் நீலகண்ட பிள்ளை, தாயார் ராஜம் ஆகியோர் மீதான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சுரேஷ் ராஜன் தரப்பில் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில். இதனை எதிர்த்து சுரேஷ் ராஜன் தரப்பில் மதுரையில் உள்ள உயர் நீதிமன்றம் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 2012-ம் ஆண்டு சுரேஷ் ராஜன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு, இந்த வழக்கை குமரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது.
நாகர்கோவிலில் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் நேற்று (பிப்ரவரி-14) இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் சுரேஷ் ராஜானை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
காலை முதலே நாகர்கோவில் நீதிமன்றம் வளாகத்தில் சுரேஷ் ராஜன் ஆதரவாளர்கள் பெரும் கூட்டமாக திரண்டு நின்றவர்கள். தீர்ப்பு எப்படி இருக்கும் என அவர்களுக்கு உள்ளே கேள்வியும், பதிலையும் அவர்களது மனோ நிலைக்கு ஏற்ப விவாதித்துக்கொண்டிருந்த நிலையில் மாலை. 4.30 மணிக்கு வந்த தீர்ப்பில், சுரேஷ் ராஜன் விடுதலை என்ற நீதிபதியின் தீர்ப்பு கண்டு நீதிமன்றம் வளாகத்திலே உற்சாகமாக கோசம் எழுப்பினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் பல நூறு சால்வைகள் சுரேஷ் ராஜன் தோளில் விழுந்தது.
உற்சாகமான சுரேஷ் ராஜன் ஆதரவாளர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக இருப்பது… குமரி மாவட்ட அரசியலில் மேலும் ஒரு மாவட்ட செயலாளராக சுரேஷ் ராஜான் பெயர் அறிவிப்பைத்தான்.
நீதிமன்றத்தின் தீர்ப்பால், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனும் அவர்களது குடும்பத்தினரும் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து நிம்மதி பெருமூச்சு அடைந்தார்கள்.



