திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி திருட்டில் சம்பத்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் சமயபுரம் நால்ரோடு, எம்ஜிஆர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி செயலாளரும், செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி முன்னிலையிலும் நடைபெற்றது.

அமைப்பு செயலாளர் எஸ் வளர்மதி, அரசு தலைமை கொறடா மனோகரன்,
முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் அமைச்சர்கள் ப.அண்ணாவி, டி.பி.பூனாட்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், T.இந்திராகாந்தி, சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளர் ஆர் எஸ் புல்லட் ஜான், அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி,
வயிற்றுப் பிழைப்புக்காக ஒருவன் திருடினால் அவரை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைகிறார்கள்
தமிழ்நாட்டு காவல்துறை அதிகாரிகளை பார்த்து, போலீசை கையில் வைத்துள்ள மு.க.ஸ்டாலினை பார்த்து கேட்கிறேன் சாதாரண குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் நீங்கள், ஒரு குற்றவாளி மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை, கைது செய்யவில்லை, இன்னும் அந்த கல்லூரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் திமுக என்பதற்காகவா?
திருட்டு என்றால் குற்றம் ஆனால் கிட்னியை திருடி உள்ளது பெரும் குற்றம் இல்லையா?
வடிவேலு காமெடியில் வருவதை போன்று அந்த காட்சியை போன்று தனது மருத்துவக் கல்லூரியில் வருவர்களின் கிட்னியை திருடி இருக்கிறான் கதிரவன் என விமர்சனம்
ஒரு எம்எல்ஏவிற்கு எவ்வளவு திமிரு இருந்தால், நான் 12.5 கோடி ரூபாய்க்கு கார் வைத்துள்ளேன் rolls-royce கார் வைத்துள்ளேன். ஆனால் ஒரு கிட்னியை நான் விற்றால் எனக்கு ரெண்டு லட்சம் கிடைக்கும் நான் அப்படியே திருடினால் கூட என் 12 கோடியை என்னால் எட்ட முடியாது என கொழுப்புடன், ஆணவத்துடன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இங்குள்ள அனைவரின் கிட்னியை கொடுத்தாலும் 12.5 கோடி கிடைக்காது என சட்டமன்ற உறுப்பினர் திமிராக பேசுகிறார். 2026ல் உங்களுக்கெல்லாம் இருக்கிறது. உயிரைக் கொடுக்க வேண்டிய மருத்துவமனையே கிட்னி திருட்டில் ஈடுபடுவது அநியாயமானது.
இத்தகையோருக்கு தண்டனை தரும் வகையில் வருகின்ற தேர்தல் அமைய வேண்டும்.
தமிழகத்தில் கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது.
ஸ்டாலின் அப்பாவையே பார்த்த கட்சி அதிமுக. இதற்கெல்லாம் பதிலை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் ஆளும் திமுக அரசுக்கு வழங்குவர் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசியது..

பெரம்பலூர் மாவட்டம் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் கிட்னி திருட்டு விவகாரத்தில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை, இவற்றைக் கண்டித்து இன்று அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிட்னி திருட்டு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கிட்னி திருட்டு கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் தலை தூக்கி உள்ளது. அரசின் அனுமதி இல்லாமல் போதைப்பொருள் கஞ்சா விற்பனை எப்படி நடைபெறும் என கேள்வி எழுப்பினார். இதனால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என குற்றம் சாட்டினார்.
அதிமுகவில் யார் பிரிந்து சென்றாலும் எந்த பின்னடைவும் இல்லை, இது எம்ஜிஆர் அவர்கள் போட்ட விதை தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளார்கள் ஒரு சிலர் பிரிந்து செல்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஒன்றிணைய வேண்டும், ஒன்றிணைய வேண்டும் என்று கூறுபவர்கள் முதலில் அந்த 4 பெயர்களும் ஒன்றிணையட்டும், பின்பு அதைப்பற்றி பேசலாம்..
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது.. அதிமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அதற்கு ஒரு காரணம் கூறுகிறார்கள்.. தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவினர் ஐ சி யு வில் இருப்பார்கள் என தெரிவித்து இருந்தார்.. இதற்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி கூறியது..
அதிமுகவினர் அனைவரும் சிரித்த முகத்தோடு மகிழ்ச்சியாக உள்ளனர்.. அவரைப் பார்த்தால்தான் ஐசியுவில் இருக்கிற போல் இருக்கிறார். நாங்கள் எல்லாம் வலுவாக தான் இருக்கிறோம்.. அவருக்கு தான் ஐ சி யு விற்கு போக வேண்டுமென்று ஆசையாக இருக்கிறார் அதனால் தான் திரும்பத் திரும்ப அதைப் பற்றிய பேசுகிறார்.
தமிழ்நாடு முதல்வர் வெளிநாடு சென்று தற்போது தான் திரும்பி இருக்கிறார்.. முதலீடு தொடர்பாக அவர்கள் எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்