அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் தற்குரியுடன் கூட்டணி வேண்டாம் (அதிமுக) கூடா நட்பு கேடாய் முடியும்-என்றும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக வேண்டும் மீண்டும் அண்ணாமலை என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜக விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் ஒட்டியுள்ள போஸ்டரால் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டப்பட்டுள்ள இப்போஸ்டரில் “தற்குரியுடன் கூட்டணி வேண்டாம்” (அதிமுக) “கூடா நட்பு கேடாய் முடியும்”-“வேண்டும் மீண்டும் அண்ணாமலை” என்ற வாசகங்கள் மற்றும் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் புகைப்படங்கள் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.