• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திமுக மாணவர் அணி சார்பில் கட்டுரை போட்டி – பரிசுகள் வழங்கிய ஒன்றிய செயலாளர் சுதாகரன்…

ByKalamegam Viswanathan

Oct 20, 2023

விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் திமுக மாணவர் அணி சார்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சுதாகரன் பரிசுகள் வழங்கினார்.

மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக மாணவர் அணி சார்பில் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது. முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்ளுக்கு செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுதாகரன் பரிசுகள், பதக்கங்கள்,ஷீல்டுகள் வழங்கினார். இதில் செல்லம்பட்டி ஒன்றிய திமுக நிர்வாகிகள் பள்ளி ஆசிரிய பெருமக்கள் மாணவியர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.