• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தேடலும்,ஆர்வமும் இருந்தால் வெற்றி நிச்சயம் கல்லூரி விழாவில் ஈரோடு மகேஷ் பேச்சு

BySeenu

Jul 18, 2024

கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனுகிரஹா எனும் தலைப்பில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை தலைவர் நாகராஜ்,தலைமை செயல் அதிகாரி மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், தலைமை உரையாற்றிய கல்லூரி தலைவர் மதன் செந்தில்,

கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக உயர் தரத்திலான விளையாட்டு மைதானங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

அதே போல மாணவர்கள் நவீன தொழில் நுட்பங்களுக்கு தகுந்தபடி தங்களது திறன்களை வளர்த்தி கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், கல்லூரி வளாகத்தில் உள்ள வகுப்பறைகளை உயர் தரத்திலான நவீன அமைப்புகளுடன் விரைவில் மாற்றம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

விழாவில் ,சிறப்பு விருந்தினராக, நடிகரும், எழுத்தாளரும், தன்னம்பிக்கைப் பேச்சாளருமான ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,வாய்ப்புகளை மாணவர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறிய அவர் மாணவர்களுக்கு எப்போதும் பசி எனும் தேடல் மற்றும் ஆர்வம் இருந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என தெரிவித்தார்.

கல்லூரி காலம் வாழ்க்கையின் மிக முக்கியமான காலம் என குறிப்பிட்ட அவர்,இந்த நாட்களில் நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என கூறினார்.

விழாவில்,முன்னால் இந்திய கால்பந்து அணியின் கேப்டனும்,இரத்தினம் ஸ்போர்ட்ஸ் எக்சலன்ஸ் மையத்தின் இயக்குனர் ராமன் விஜயன் , கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் கல்லூரித் துணைமுதல்வர் சுரேஷ் . ஆய்வுத்துறை புல முதன்மையர் சபரிஷ், முனைவர் ஹேமலதா மற்றும் துறைத்தலைவர்கள் பேராசிரியர் பெருமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.