• Mon. May 20th, 2024

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர் கே எஸ் தென்னரசு

நீண்ட இழுபறிக்கு பின்பு அதிமுக இபிஎஸ் அணியில் வேட்பாளராக இத்தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசு நிறுத்தப்படுவார் என்று அதிமுகவட்டத்தில் உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கான அறிவிப்பை 27ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க இருக்கிறார்.
கே எஸ் தென்னரசு இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2006 வரை பிரிக்கப்படாத ஈரோடு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். பின்னர் 2016 முதல் 2021 வரை ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார். ஈரோடு மண்ணின் மைந்தரான கே எஸ் தென்னரசு தொகுதி மக்களிடையே பிரபலமானவர். கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்.
ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் செய்து வந்தவர். ஏழை எளிய மக்கள் எளிதில் அணுகக் கூடியவராக இருப்பதோடு சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் என அனைவரிடமும் தோழமையுடன் பாசத்துடனும் இருந்து வருபவர். ஈரோட்டில் மேம்பாலம் கொண்டு வந்தவர். அரசு தலைமை மருத்துவமனை இவர் எம்எல்ஏவாக இருந்தபோது தரம் உயர்த்தப்பட்டு மல்டி லெவல் ஹாஸ்பிடலாக மாற்றியவர். ஈரோடு நகரில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் மெஜாரிட்டியாக இருப்பதால் அவர்கள் வாக்கு வங்கியை சுலபமாக தன் பக்கம் இழுக்கும் அளவுக்கு அவர்களோடு மிகுந்த நெருக்கத்தோடு இருப்பவர் என்பதால் ஆளுங்கட்சிக்கு டாப் ஃபைட் கொடுப்பார் என்பதால் இவரை அதிமுகவில் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக இபிஎஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *