• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துவ விழா

Byp Kumar

Dec 23, 2022

மதுரையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துவ விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது
மதுரை அனுப்பானடி பகுதியில் அமைந்துள்ள கலங்கரைவிளக்கு ஏ.ஜி சபையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் தெற்கு மாவட்டத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துவ விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் காட்வின் தலைமை தாங்கினார். கம்பளி சித்தர்சிங்காரேவேலு, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக வடக்கு மாவட்ட செயலாளர் சீனிமுகமது,போதகர்கள் ஜான்வின்ஸ்லி, சாம்ராஜ், நல்லெணண இயக்க மாநில துணைத்தலைவர் இமானுவேல்தனபாலன் வாழ்த்துரை வழங்கினார்

. சிறப்பு அழைப்பாளர்களாக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், திமுக மாமன்ற உறுப்பினர்கள் சுகாதார குழு தலைவர் ஜெயராஜ், செந்தாமரைகண்ணன், காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ கிறிஸ்துவ விழாவில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி வேஷ்டி சேலை போர்வை மற்றும் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது இவ்விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.