• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மோடியை தனித்தனியே சந்திக்கும் இபிஎஸ்- ஓ.பி.எஸ்.

ByA.Tamilselvan

Jul 26, 2022

மோடியை தனித்தனியே சந்திக்கும் இபிஎஸ்- ஓ.பி.எஸ்.
A.TAMILSELVAN
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்னை வரம் பிரதமர் மோடியை ஒபிஎஸ்,இபிஎஸ் தனித்தனியே சந்தித்து பேச முடிவு.
அ.தி.மு.க.வில். அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே ஏற்பட்டுள்ள போட்டி உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரது ஆதரவை பெற்று தங்களது நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தீவிரமாக உள்ளனர். இதை கருத்தில் கொண்டுதான் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்தவார இறுதியில் டெல்லிக்கு சென்றார். புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டுவிட்டு அப்படியே பிரதமர் மோடியையும் சந்தித்து பேச வேண்டும் என்று அவர் திட்டமிட்டு இருந்தார். அவரது இந்த திட்டம் வெற்றி பெறவில்லை.
இந்தநிலையில் பிரதமர் மோடி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்னை வர உள்ளார். அன்று மதியம் குஜராத் மாநிலத்தில் இருந்து தனி ராணுவ விமானத்தில் புறப்பட்டு வரும் அவர் அன்று மாலை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இரவு 8 மணி வரை அவர் அந்த நிகழ்ச்சியில் இருப்பார் அதன்பிறகு அவர் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று அங்கு இரவு தங்க உள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து பேசுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது எனவே நாளை மறுநாள் இரவு நடக்கப்போகும் சந்திப்பு அ.தி.மு.க.வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.