சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே சோழபுரம் கிராமத்தில் புனிதா என்பவரது வீட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு மராமத்து பணி நடைபெற்றது. அப்போது இதனை ஒப்பந்ததாரர் லோகநாதன் மேற்கொண்டுடார். இந்நிலையில் அங்கு பன்னீர்ச்செல்வம் என்பவர் வெல்டிங் பணி மேற்கொண்டு வந்த போது வெல்டிங் பணியில் குறைபாடு இருப்பதாக ஒப்பந்ததாரர் லோகநாதன் வெல்டர் பன்னீர்செல்வத்திடம் சுட்டிக்காட்டிய போது அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர் லோகநாதன் வெல்டர் பன்னீர்செல்வத்தை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பன்னீர்செல்வம் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2021- ல் உயிரிழந்தார். இதனை அடுத்து ஒப்பந்ததாரர் லோகநாதன் மீது சிவகங்கை நகர் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவுசெய்து சிவகங்கை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. ஒப்பந்ததாரர் லோகநாதன் மீதான குற்றம் உறுதி செய்யப்படடதால் அவருக்கு இன்று ஆயுள்தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன் உத்தரவிட்டார்.