• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

என்னடி ராக்கம்மா , நிலா அது வானத்து மேலே ஆகிய பாடல்களை பாடி கைதட்டி, 62 வயதுக்கு மேற்பட்டோர் சந்தித்த 10-ம் வகுப்பு பழைய மாணவர்கள் உற்சாகம்.

ByKalamegam Viswanathan

Feb 4, 2024
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பி.கே.என் பள்ளியில், கடந்த 75-76 ஆம் ஆண்டில் எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட சந்திப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அனைவரும் 62 வயதுக்கு மேற்பட்டோர் என்பதும், இதில் விஞ்ஞானி, அரசுத்துறை, மற்றும் வங்கி துறையில் மிகப்பெரிய பதவியில் ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்கள் 60க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டு, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன், சினிமா பாடல்கள் என்னடி ராக்கம்மா, நிலா அது வானத்து மேலே என்ற பாடலை பாடி, கைதட்டி, ஆடிப்பாடி உற்சாகத்துடன் ஒருவருக்கொருவர் மகிழ்ந்து கொண்டனர்.
இதனால் தங்களுக்கு வயது முதிர்வு என்ற உணர்வே இல்லாமல், தற்போது நாங்கள் 16 வயதுடைய ப்ளஸ் ஒன் மாணவர்கள் போன்றே உள்ளது எனவும் தெரிவித்தனர்.