மதுரை மாவட்டம் சோழவந்தானில் சாய் லாங்குவேஜ் இன்ஸ்டிட்யூட் சார்பாக கிராமப்புற பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேசும் திறனை மேம்படுத்த பயிற்சி மற்றும் கருத்தரங்கு சந்திரன் பேலஸ் மகாலில் நடைபெற்றது. ஜே சி ஐ மதுரை மீனாட்சி தலைவர் சொர்ணாம்பிகா தலைமையேற்று துவக்கி வைத்தார்.

ஜவுளி நிறுவனர் பி எஸ் மணி, ராஜாராம் முன்னிலை வகித்தனர். பயிற்றுவிப்பாளர் காயத்ரி வரவேற்றார். மாணவ மாணவர்களின் ஆங்கில உச்சரிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் நிறுவனர் மகாலட்சுமி பயிற்றுவித்தார். இதில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.