மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகளில் மெயின் ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் எடுப்பது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறையினர் கடந்த வாரம் வாட்ஸப் மூலமாக அறிக்கை விட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களும் வியாபாரிகளும் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை எடுத்து வந்தனர். தற்போது அதிகாரிகள் எந்தவித அளவீடும் செய்யாமல் ஜேசிபி மிஷின் மூலம் ரோட்டுக்கு வெளிப்புறம் உள்ள கட்டிடங்களை இடிக்க முட்பட்ட போது, அந்த பகுதியில் உள்ள மக்கள் அளந்து நோட்டீஸ் விடாமல் எடுப்பது சட்டவிரோதமானது எங்களது இடம் எங்களுக்குதான் தெரியும் உங்களுடைய அரசு இடம் இருப்பதாக தெரிந்தால் முன்னதாக நீங்கள் அளந்து குறியீடு போட்டு இருந்தால் நாங்கள் எடுத்திருப்போம். ஜேசிபி எந்திரத்தை கொண்டு வந்து அரசு இடம் உள்ளே இருப்பதாக கூறினால் நாங்கள் எப்படி எடுக்க விடுவோம் என்று அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதி பதட்டமாக காணப்பட்டது. ஆனால் அதனை கேட்க மறுத்த நெடுஞ்சாலை துறையினர் தொடர்ந்து ரோட்டிற்கு அந்த புறம் உள்ள இடங்களை ஜேசிபி மூலம் அகற்ற ஆரம்பித்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜகுமார், ராதா, முத்துக்குமாரி, தாசில்தார் ராமச்சந்திரன், உதவி பொறியாளர் கௌதமன்,மண்டல துணை தாசில்தார் புவனேஸ்வரி வருவாய் ஆய்வாளர்கள் கௌதமன். கிரிஜா பேட்டை கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டி சோழவந்தான் கிராம நிர்வாக அலுவலர் மரியஅமலோர்பவம், சோலைகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி உள்பட சோழவந்தான் தென்கரை பிர்கா கிராம நிர்வாக அலுவலர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் முதுநிலை பணியாளர் கல்யாண் சுந்தரம் உட்பட மேற்பார்வையாளர் அர்ஜுன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பேரூராட்சி வருவாய்த்துறை பொதுப்பணித்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சிவக்குமார் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
