• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஜூன் 23ஆம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்..!

Byவிஷா

Jun 20, 2023

சென்னையில் வருகிற 23ஆம் தேதி அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வருகிற 23ஆம் தேதி அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.

சென்னை 32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு கட்டணமும் தேவையில்லை. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.