• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளி மகள் சிகிச்சைக்கு ரூ.16 கோடி வழங்கி முதலாளி

Byமதி

Nov 22, 2021

சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தில் தொழிலாளி சதீஷ் குமார் ரவி. இவரது 2 வயது மகள் சிருஷ்டி ராணி மிகவும் அபூர்வமான முதுகெலும்பு தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக சிருஷ்டி ராணி, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மற்றும் பிலாஸ்பூர் அப்பல்லோ ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். தற்போது அவர் வீட்டில் வென்டிலேட்டர் துணையுடன் சிகிச்சை பெறுகிறார்.

அவருக்கு தற்போது ‘ஜேர்ஜென்ஸ்மா’ என்ற ஊசி மருந்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து செலுத்த வேண்டுமாம். இந்த ஊசி மருந்தின் விலை ரூ.16 கோடி ஆகும்.

இதுகுறித்து சதீஷ் குமார் ரவி தனது நிறுவனத்திடம் முறையிட்டார். இதையடுத்து ரூ.16 கோடிக்கான காசோலையை நேற்று முன்தினம் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியான சஷாங் சேகர் தேவாங்கன், சதீஷ் குமார் ரவியிடம் வழங்கினார்.

இந்த சம்பவம் அங்கு வேலை செய்வோரை மற்றும் இல்லாமால் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.