• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் சேதம்

ByKalamegam Viswanathan

Feb 12, 2024

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்கா நல்லூர் பகுதியில் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் மின்சார வாரியத்தின் அலட்சிய போக்கால் மின்சாரம், மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர் )சேதம் உயிர் பலி ஏற்படும் முன் மாற்றி அமைத்து தர கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை.

இந்தப் பகுதியில் மின்சார வாரியத்தின் அலட்சியப் போக்கால் மின்சாரம் மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) சேதமடைந்து பல மாதங்களாக கம்பிகள் வெளியே தெரிந்து அதை மின்சார வாரிய ஊழியர்கள் கம்பிகளை வைத்து கட்டி உள்ளனர். அது எப்போ இடிந்து கீழே விழும் நிலை உள்ளது.

இந்த மின்சாரம் மின்மாற்றியை (டிரான்ஸ்பார்மர்) மாற்றக்கோரி பலமுறை சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், பாராளுமன்ற உறுப்பினர் தனுஸ் M குமார், ஊராட்சி மன்ற தலைவர் இசக்கி ராஜா, மின்சார வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் உட்பட பலமுறை கூறியும் இதை பாரும் கண்டு காணாத அலட்சிய போக்காவே உள்ளனர்.

மேலும், அப்பகுதி மக்கள் அந்த பகுதியில் வேலைக்கு செல்பவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அங்கு வந்து தான் பேருந்துக்கு செல்ல வேண்டும் விபத்து ஏற்ப்பட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனவே மாவட்ட நிர்வாகம் உயிர் சேதம் ஏற்ப்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்சாரம் மின் மாற்றியை மாற்றி புதிய (டிரான்ஸ்பார்மர்) அமைத்து தரும்படி அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.