தொடர் மின் தடை, செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை அழைத்து அலுவலகத்தில் வைத்து மின்சாரவாரிய அதிகாரி, ஊழியர்கள் மிரட்டினர்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மின்சார வாரிய அலுவலகத்தில் தொடர் மின் தடை குறித்து செய்தி வெளியிட்ட நிலையில் செய்தியாளர்களை அலுவலகத்திற்கு அழைத்து பெண் அதிகாரி உட்பட மின்வாரிய ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அடுத்த காஞ்சிரங்கால் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மின் தடை ஏற்பட்டுக் கொண்டேவுள்ளது. இது குறித்து தினசரி நாளிதழ்களில் செய்தியும் வெளியானதுடன் பொது மக்களும் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் செய்தி வெளியிட்டதால் ஆத்திரமடைந்த மின்சாரவாரிய போர்மேன் ராமமூர்த்தி என்பவர் செய்தியாளரை தொலைப்பேசி வாயிலாக அழைத்து மிரட்டியுள்ளார். இது சம்பந்தமாக செய்தியாளர் மின்சாரவாரிய உதவி பொறியாளர் ஜிமிக்கி ராணியிடம் புகார் தெரிவித்தனர். சமாதானம் செய்வதாக கூறி, செய்தியாளர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்ததுடன் உதவி பொறியாளர் ஜிமிக்கிராணி மற்றும் அங்குள்ள ஊழியர்கள் கூட்டமாக சேர்ந்து வழக்கம்போல் மின்வெட்டு என எவ்வாறு செய்தி வெளியிட்டு தகவல் தெரிவிப்பீர்கள் என மிரட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கம்போல் மின்வெட்டு என தகவல் தெரிவித்த செய்தியாளர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து உதவி பொறியாளர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.