• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆலந்தூரில் மின்சார ஆட்டோ சேவை

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் எம் ஆட்டோ பிரைடு என்ற மின்சார ஆட்டோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார். எம்.பி ஆர்.எஸ்.பாரதி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) ராஜேஷ் சதுர்வேதி, எம் ஆட்டோ குழுமத்தின் நிறுனவர் மன்சூர் அல்புஹாரி உட்பட பலர் பங்கேற்றனர்.
இது முழுமையாக மின்சக்தியில் இயங்கும் முதல் மூன்று சக்கர வாகனமாகும். இதனை செயலி மூலம் பயன்படுத்தி, மின்னணு முறையில் பணத்தைச் செலுத்தலாம். நேரடியாகவும் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம். தொடக்க சலுகையாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.12 என்ற கட்டணத்தில் இந்த சேவை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.