சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த அமைப்பின் மாநில தலைவர் முகமது ரியாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எங்கள் அறிக்கை இளைஞர்கள் நலன் சார்ந்து வெளியிடபட்டுள்ளது. நாங்கள் கட்சி சார்ந்து அறிக்கையை வெளியிடவில்லை நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை எங்களுடைய அறிக்கையை அனைத்து கட்சிகளிடமும் வழங்க உள்ளோம் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் யூத் கமிஷன் தேவைப்படுகிறது என கேட்டுக்கொண்ட அவர் தமிழகத்தில் தொடர்ச்சியாக வேலை இழப்புகள் இருந்து வருவதாகவும் வருடம் தோறும் ஐந்து சதவிகிதம் இளைஞர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதாக கூறினார். எனவே மதிப்பெண் அடிப்படையிலான கல்வி மட்டும் இளைஞர்களுக்கு போதாது அதை தாண்டி திறன் அடிப்படையிலான கல்வி தேவைப்படுகிறது என்றார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் தொழில் வாய்ப்புகளை முன்னிலைப்ப்டுத்த வேண்டும் என்றார்.
ஐடி தொழில்துறை சார்ந்து மட்டும் அனைத்தையும் நிறைவு படுத்த முடியும் என்று அரசு நினைப்பதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் கூறினார். அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழில் துறை சார்ந்து Youth Resource Centre உருவாக்கி அந்தந்த மாவட்ட இளைஞர்கள் அந்த மாவட்டத்திலேயே வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அனைத்து தரப்பு இளைஞர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு தான் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர் இஸ்லாமிய இளைஞர்கள் மீதான இஸ்லாமிய ஃபோபியா போலவே தலித் இளைஞர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவித்தார். முதல்வர் அறிவித்த அறிவிப்புகள் எல்லாம் சட்ட ரீதியாக அமல்படுத்த வேண்டும் என்றார்.
பெண்களை முன்னிலைப்படுத்தி பல்வேறு அறிவிப்புகள் வெளியிடும் பட்சத்தில் இளைஞர்கள் பற்றி யாரும் பேசுவதில்லை என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் இதெல்லாம் மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் என்பது அதிகமாக உள்ளதாக அந்த இயக்கத்தினர் தெரிவித்தனர்.




