• Tue. Feb 10th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

தேர்தல் பரப்புரை பிரதமர் மோடி தலைமையில் கூட்டணி..,

ByP.Thangapandi

Feb 10, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பனிமனை அருகில் ஐந்தாண்டு திமுக அரசின் ஆட்சியின் அவல நிலைகள் குறித்த தெருமுனை பிரச்சார கூட்டம் எதிர்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,

இந்த கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயக்குமார்.,

வரும் மார்ச் 1 ஆம் தேதி மதுரை மண்டேலா நகர் திடலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பரப்புரையை முதற்கட்டமாக மதுராந்தகத்தில் துவங்கிய மாற்றத்திற்கான அடித்தளமிட்டு, சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில், நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரர் பிறந்த இந்த மண்ணில், கண்ணகி நீதி கேட்ட இந்த மதுரையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் அரியணையில் அமர்த்துவதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தோழமை கட்சியின் தோழர்களான டிடிவி தினகரன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பார்வட் ப்ளாக் கட்சியின் தலைவர்களும் பங்கேற்று எடப்பாடியாரை முதல்வர் அரியணையில் அமர்த்த இந்த தாய் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை, சிந்தனைகளை தேர்தல் பரப்புரையில் எடுத்து வைக்க உள்ளனர்., இதில் நாம் எழுச்சியோடு கலந்து கொண்டு, தென் தமிழ்நாடு அதிமுக கூட்டணியின் கோட்டை என்கிற வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும்.,

உசிலம்பட்டி மண் இரட்டை இலையின் கோட்டை, எப்போதுமே இரட்டை இலை தான் மலர்ந்திருக்கிறது., வரும் 2026 தேர்தலிலும் நான் எழுதி வைத்து, பத்திரத்தில் கூட கையெழுத்திட்டு சொல்கிறேன், இரட்டை இலை தான் உசிலம்பட்டியில் மலரும்., அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அமர முதல் வாக்காக உசிலம்பட்டி தொகுதியின் வாக்கு அமையும்.,

ஜனநாயகத்தை காப்பாற்றுகிற தேர்தல்., இன்று சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை., நகராட்சி துறையில் பணி நியமனம் என்றாலும் சரி, பணி மாறுதலிலும் இவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது என மூன்று கடிதங்களை அமலாக்கத்துறை டிஜிபி அவர்களுக்கு எழுதியுள்ளனர். அவரே மயங்கி மருத்துவமனையில் படுத்துவிட்டார்., அவரும் நிரந்தர டிஜிபி அல்ல பொறுப்பு டிஜிபி.,

ஓராயிரம் சாதனைகள் என்று பட்டியலிட்டு பெயர்களை வாசிக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே, பெயர் வைப்பதில் கின்னஸ் சாதனை படைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களே, இந்த தாய் தமிழ்நாட்டிற்கு ஒரு நிரந்தர டிஜிபி நியமிக்க முடியாத நிலையில் தலைகுணிந்து நிற்கிறது இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு காரணம், பொறுப்பு டிஜிபி உடனடியாக ஏதாவது முடிவு எடுக்க முடியாத நிலை தான், நிரந்தர டிஜிபி நியமிப்பதில் என்ன தயக்கம்., பொறுப்பு டிஜிபியை வைத்துக் கொண்டு இந்த தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் காலத்தில் மட்டுமே வருபவர்கள் அல்ல அதிமுகவினர்., மக்களோடு மக்களாக பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் நாங்கள் உழைத்து கொண்டிருக்கிறோம்.

தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமாக பேசுவார்கள், இந்த ஐந்து ஆண்டுகாலம் விளம்பர வெளிச்சத்தில் தான் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இளைஞரணி மாநாடு, மகளீரணி மாநாடு, மண்டல மாநாடு, 21 ஆம் தேதி தென் மண்டலத்தில் மாநாடு என எதற்கு இத்தனை மாநாடு என்றால் அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. விலைவாசி விலை உயர்ந்து விட்டது, போதை பொருள் நடமாட்டம், தொழில் முதலீடு இல்லை., ஆனால் தான் பெற்ற பிள்ளையை முதல்வராக்க வேண்டும் என்று தான் மாநாடு நடத்துகிறீர்கள், நீங்கள் கவலையோடு நடத்துகிற மாநாடு கானல் நீராக கரைந்து போகும்.

இந்த தேர்தல் இதுவரை கண்டிராத தேர்தல், ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும், மக்களாட்சிக்கும், மன்னராட்சிக்கும் இடையே நடைபெறும் தேர்தல்., இந்த மன்னராட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும். அவர்கள் தலைகீழாக நின்று மண்டியிட்டு பிச்சை கேட்டாலும் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை., எடப்பாடி பழனிச்சாமியை கோட்டைக்கு அனுப்புவோம், ஸ்டாலினை ஓய்வு எடுக்க வீட்டுக்கு அனுப்புவோம் என பேசினார்.