மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலுக்கு அருகே உள்ள ஐயன் குளத்தில் எல்லம்மாள் 62 வயது மூதாட்டி கால் தவறி குளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்திருக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் – அபயாம்பிகை கோவில் குளம் தற்போது நகராட்சி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஐயன் குளத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நீராடுவதும் துணிகளை துவைப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் காலையில் எல்லம்மாள் 62 என்ற மூதாட்டி நீராடுவதற்காக குளத்தில் இறங்கி இருக்கிறார். அப்போது கால் தடுமாறி குளத்தில் விழுந்த அவர் சற்று நேரம் தத்தளித்தவாறு போராடி இருக்கிறார்.

பொதுமக்கள் இந்த நிலையில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் விரைந்துவந்து உயிருக்கு போராடிவரும் எல்லம்மாளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். வெகு நேரமாக எல்லம்மாள் நீரில் சிக்கி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறார்.
இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையம் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.