உசிலம்பட்டி அருகே கார் வீட்டின் மீது மோதி விபத்து- நடந்து சென்ற முதியவர் மீது மோதி காயம் உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாடிகருப்பு கோவில் என்ற இடத்தில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்ற கார் திடீரென அருகில் உள்ள பெரியகருப்பன் என்பவரின் பெட்டி கடை மற்றும் பாண்டித்துரை என்ற நபரின் வீட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் மாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் என்ற முதியவர் தனது தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி சென்றவர் மீது கார் மோதியதில் சிறிய காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் முதியவரை மீட்டு 108 வாகனம் மூலம் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் திடீரென கார் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியது.

