மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்? என்றும், கல்வி மட்டும்தான் யாராலும் திருட முடியாத சொத்து என்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மழை தொடர்பான எச்சரிக்கை வந்து விட்டாலோ, சிறிய தூறல் வந்து விட்டாலோ பெற்றோர்கள் எனக்கு போன் செய்து, ‘பள்ளிக்கு லீவு உண்டா?’ என்று கேட்கின்றனர். மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்? நான் கேரளாவை சேர்ந்தவன். அங்கு ஜூன் 1ஆம் தேதி முதலே மழை தொடங்கிவிடும். மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு செல்வேன். மழைக்காக விடுமுறை என நினைத்து நான் வீட்டில் இருந்திருந்தால், இன்று உங்கள் முன் ஆட்சியராக நின்றிருக்க மாட்டேன். தயவு செய்து பெற்றோர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். வாழ்க்கையில் கல்வி மட்டும்தான் யாராலும் திருட முடியாத சொத்து என கூறியுள்ளார்.
கல்வி மட்டும்தான் திருட முடியாத சொத்து.., தஞ்சை மாவட்ட ஆட்சியர் கருத்து..!
