விருதுநகர் கிழக்கு மாவட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் வருகையை முன்னிட்டு சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சாத்தூர் .K.S.சண்முகக்கனி தலைமையில்,

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தை சேர்ந்த அனைத்து கிராமங்களுக்கும் பொதுமக்களை அழைக்கும் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர்,விருதுநகர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் இந்திரா கண்ணன்*,சாத்தூர் நகர கழக முன்னாள் செயலாளர் இளங்கோவன் கிளை கழக செயலாளர்கள்,மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் கருப்பசாமி,இளைஞர் பாசறை நிர்வாகிகள் மற்றும் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
