• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மணிப்பூர் விவகாரத்தில் எடப்பாடியார் ஓங்கி அழுத்தமாக குரல் கொடுத்திருக்கிறார்… முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..,

ByKalamegam Viswanathan

Jul 26, 2023

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் நடக்கக்கூடிய எந்தவிதமான அநீதிகளையும் எதிர்த்து ஓங்கி குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் அதிமுக. அதிமுக சார்பாக வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெற உள்ள முன்னேற்பாடுகளை முன்னால் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,

அதிமுகவின் வலிமையை, திருப்புமுனையை, மதுரையே குளுங்குகின்ற வண்ணம், பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ என்று சொல்லக்கூடிய வகையில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்கும் மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளை, காண்போரை வியக்க வைக்கும் நுழைவு வாயில் போன்ற பணிகளை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம்.

இந்த மாநாடு வரக்கூடிய தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்விக்கு,

எடப்பாடியார் பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பிறகு, அதிமுகவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லக் கூடிய அளவிற்கு, 2 கோடி தொண்டர்களை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி போன்ற அடையாளங்களை கொண்டிருக்க கூடிய நிலையில் உலகிற்கு அதிமுகவின் வலிமையை பறைசாற்ற கூடிய, வரக்கூடிய தேர்தல்களில் ஆளும் கட்சியாகும் அளவிற்கு எடுத்துக்காட்டும் வண்ணமாக மதுரை மாநாடு அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கூட்டணி கட்சியை அழைப்பது குறித்த கேள்விக்கு,

அது குறித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் முடிவெடுப்பார்.

மணிப்பூர் விவகாரம் குறித்த கேள்விக்கு,

அதற்கு எடப்பாடியார் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் நடக்கக்கூடிய எந்தவிதமான அநீதிகளையும் எதிர்த்து ஓங்கி குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் அதிமுக. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஓங்கி அழுத்தமாக குரல் கொடுத்திருக்கிறார். ஊர் விற்கின்ற வண்ணத்திற்கு இல்லை, பார் வியக்கின்ற வண்ணத்திற்கு மதுரை மாநாடு சிறப்பாக அமையும்.