• Sun. Mar 29th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிப்பு..,

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் இன்றைய உறுப்பினரும்.குமரி தொகுதியில் தளவாய் சுந்தரம் தொடர்ந்து போட்டியிடுகிறார்.

ஆரல்வாய்மொழி பகுதியில் எடப்படி பழனிச்சாமி. தளவாய் சுந்தரத்திற்கு வாக்குகள் சேகரித்தபோது.

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி த.மா.கா. வேட்பாளர் டாக்டர். நவின்சைமனும் பங்கேற்றார். ஏனைய 4_ ங்கு தொகுதிகளில் பாஜகவின் வேட்பாளர்கள் அறிவிக்காத நிலையில். எடப்பாடி பழனிச்சாமி இரட்டை இலை மற்றும் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

ஸ்டாலினின் அரசு கலெக்சன், கமிஷன் அரசு என குற்றம் சாட்டியவர் தொடர்ந்து.
குமரி மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டம். அதிமுக ஆட்சியில் குமரி மாவட்டத்தில் இரண்டு கலைக்கல்லூரி களை உருவாக்கினோம். நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்தினோம்.

மீன்பிடி தடைக்கால உதவித்தொகை இப்போது ரூ.8000.00 அ.தி.மு.க.ஆட்சியமைந்ததும் ரூ.12,000 மாக உயர்த்தப்படும்.

பெண்களின் உரிமைத் தொகை ரூ.1500.ஆக உயர்த்தப்படும், ஆண்களுக்கும் இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் எடப்படி பழனிச்சாமி தெரிவித்தார்.