மதுரை வந்த தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் மதுரை மாவட்ட நகரக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு, மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா, தமிழ்நாடு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் மதுரை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்பி உதயகுமார் ஆகியோர் உட்பட முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் மற்றும் பா. வளர்மதி ஆகியோர் முன்னிலையில் மதுரை மாவட்ட தொழில் சங்க பிரதிநிதிகளுடன் மதுரை சிந்தாமணி அருகே தனியார் விடுதியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த சந்திப்பில், தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் முனைவர் க. திருமுருகன், பொருளாளர் விஜயன், துணைத் தலைவர்கள் பால்கனி, செல்வம், செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், அறிவுமணி, நாகராஜ், சண்முகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அப்பளம் தொழிலின் வளர்ச்சிக்கான கோரிக்கை மனுவை வழங்கினர்.
அதே நேரத்தில், மாமதுரையர் அமைப்பின் சார்பாக நிறுவனர் ஜே.கே. முத்து, துணைத் தலைவர் டெம்பிள் சிட்டி குமார் உள்பட 20 உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாமதுரையர் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் சுற்றுலா மேம்பாட்டிற்கும் தேவையான கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதில் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் சார்பாக முன்வைக்கப்பட்ட
அப்பளம், வடகம், மோர் வத்தல் போன்ற பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு GI Tag மற்றும் அரசு அங்கீகாரம்,ஏற்றுமதி சலுகைகள், சுங்க விலக்கு, மற்றும் வெளிநாட்டு சந்தை ஆதரவு,சிறு தொழில்களுக்கு GST வரிவிலக்கு, மின்சார சலுகை மற்றும் மூலதன உதவி,தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு, நலத்திட்டங்கள், கிளஸ்டர் முறை உற்பத்தி மையங்கள் மற்றும் நவீன உபகரணங்களுக்கு அரசின் நிதி உதவி,மின்சார கட்டண உயர்வும், வரி உயர்வும் பாதியாக குறைக்கப்பட வேண்டும்,
மாமதுரையர் அமைப்பு சார்பாகவும் மதுரை மற்றும் அருகிலுள்ள ஆறு மாவட்டங்களில் உள்ள பழமையான கோயில்கள், வரலாற்று இடங்களுக்கு பாதுகாப்பு,சுற்றுலா தள மேம்பாடு மற்றும் கட்டமைப்பு வசதிகள்,மாமதுரையர் பாரம்பரிய திருவிழாக்கள் மற்றும் கலாசார பண்பாட்டை பாதுகாக்க அரசு ஆதரவு,மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு சாலை, ரயில் மற்றும் விமான இணைப்புகளை அதிகரித்தல்,மாமதுரையர் அமைப்பு மேற்கொள்ளும் சமூக மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு அரசு நிதி உதவி உள்ளிட்ட கோரிக்கைகள்
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கபட்டது. அனைத்துப் பிரச்சனைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.













; ?>)
; ?>)
; ?>)