பாஜக உடன் கூட்டணி அமைக்க அதிமுக தவம் கிடக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி கூற வில்லை. அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை எடப்பாடியே தெரிவிப்பார். அண்ணாமலையின் பேச்சை நாங்கள் கண்டு கொள்வது கிடையாது. சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார்.
சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் தலைமையில், நகர செயலாளர் ராஜா முன்னிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் சிறப்புரையாற்றினார்
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் ஏற்பாட்டில் சைக்கிள், கிரைண்டர், அயன் பாக்ஸ், சேலை, வேஷ்டி, தையல் மெஷின் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,
தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒரு நாடகம் என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தில் தவறேதும் கிடையாது என்றவர், ஆர். எஸ். பாரதி பக்குவம் இல்லாதவர். அவர் திமுக அழிவிற்கு பெரும் பங்காற்றி வருவதாக தெரிவித்தவர், நாடாளுமன்ற மறு சீரமைப்பில் தமிழகத்திற்கு ஒரு இடம் கூட குறையக்கூடாது என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாக கூறியவர்,
பாஜக உடன் கூட்டணி அமைக்க அதிமுக தவம் கிடக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி கூற வில்லை என்றும், அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை எடப்பாடியே தெரிவிப்பார் என்றார். மேலும் அண்ணாமலையின் பேச்சை நாங்கள் கண்டு கொள்வது கிடையாது என நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கற்பகம், உமாதேவன், குணசேகரன், நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன்,பாசறை மாவட்ட இணை செயலாளர் பனக்கரை பிரபு, மாவட்ட பாசறை துணை செயலாளர் மோசஸ், ஒன்றிய செயலாளர்கள் ஸ்டீபன்அருள், சேவியர் தாஸ், கருணாகரன், செல்வமணி, பழனிச்சாமி, சிவாஜி, கோபி, ஜெகதீஸ்வரன், பாரதிராஜன், சோனைரவி, சிவசிவஸிதர், ஜெகன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் தமிழ்செல்வன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் வெண்ணிலா சசிகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் போஸ், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவதேவ்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் குழந்தை, மாவட்ட அமைப்பு சார் அணி மாவட்ட செயலாளர் சரவணன் நகர செயலாளர்கள் மெய்யப்பன், கண்ணப்பன், நாகூர் மீரா, அம்மா பேரவை இணை செயலாளர் மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மறவமங்கலம் அன்பழகன், நாலுகோட்டை , மணிகண்டன், சக்கந்தி மணிமுத்து, பாசறை துணை செயலாளர் சதிஷ்பாலு, பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், அமைப்பு சார் அணி மாவட்ட இணை செயலாளர் அழகர்பாண்டி, புதுப்பட்டி செந்தில், மாணவரணி அன்பு, கவுன்சிலர்கள் ராபர்ட், தாமு, கிருஷ்ணகுமார், வட்ட செயலாளர் செயலாளர்கள் கரடி சரவணன், சசிக்குமார், முருகன், மோகன், புதுப்பட்டி சிவா மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
