• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அதிகாலையில் டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்- வீட்டை விட்டு வெளியே ஓடிய மக்கள்!

ByP.Kavitha Kumar

Feb 17, 2025

டெல்லியில் என்சிஆரின் சில பகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

டெல்லி என்சிஆரின் சில பகுதிகளில் இன்று (பிப்ரவரி 17) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியில் பூமியின் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் இன்று அதிகாலை 5:36 மணிக்கு ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே சாலைக்கு ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சீனாவின் ஜின்ஜியாங்கில் ஜனவரி 23 அன்று, 80 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு டெல்லி என்சிஆர் முழுவதும் வலுவான நடுக்கம் உணரப்பட்டது. அதன்பின் மீண்டும் மூன்று வாரங்களில் இப்போது நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.