கடும் பனிப்பொழிவு காரணமாக உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் பனிப்பொழிவு காரணமாக உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைந்து காணப்படுகிறது.
தை மாத முகூர்த்த நாட்களின் காரணமாகவும், பனிப்பொழிவு காரணமாகவும் தொடர்ந்து பூக்களின் விலையும் அதிகரித்து கொண்டே செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வகையில் மல்லிகை பூ கிலோ – 4 ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை கிலோ – 3 ஆயிரம் ரூபாயக்கும், பிச்சி மற்றும் மெட்ராஸ் மல்லி கிலோ – 2 ஆயிரம் ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ – 1500 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் – 300 ரூபாய் மற்றும் பன்னீர் ரோஸ் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பனிப்பொழிவு தொடர்வதாலும், அடுத்த மாசி மாதத்தில் அதிக கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும் சூழலில் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.