• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கனமழையால் உசிலம்பட்டி மின்வாரிய அலுவலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்..!

ByP.Thangapandi

Nov 8, 2023

உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகத்தின் கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்படும் நிலையில், கனமழை காரணமாக அலுவலகத்திற்குள் மழைநீர் தேங்கும் அவல நிலை உருவாகியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் அமைந்துள்ளது உசிலம்பட்டி உப மின் நிலையம், இந்த அலுவலகத்தின் கட்டிடம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது., தற்போது இந்த கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்த நிலையிலும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அவல நிலையில் உள்ளது.
இந்நிலையில் தற்போது உசிலம்பட்டி பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மின் வாரிய அலுவலகத்தின் மேற்கூரை வழியாக மழைநீர் சொட்டுச் சொட்டாக விழுந்து மழைநீர் அலுவலக வளாகத்திற்குள் தேங்குவதால் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் அவதியுற்று வருகின்றனர். மேலும் இந்த கட்டிடத்தை சீரமைக்க பலமுறை மனு அளித்துள்ளதாகவும், விபத்து ஏற்படும் முன்பு விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.