உசிலம்பட்டி அருகே முன்பகை காரணமாக பெண் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டி காலணியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி பஞ்சம்மாள்., பெருமாள்-ன் தம்பி பாண்டிக்கும் பெருமாள் குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெருமாளின் வீட்டின் முன்பு இருந்த கல்லை மாற்றி அமைத்த போது பிரச்சினை அதிகமாகி பாண்டி அடிக்கடி தகராறு செய்து வந்த சூழலில் இன்று காலை பெருமாள் வீட்டிற்கு வந்த பாண்டி வீட்டில் இருந்த பெருமாளின் மனைவி பஞ்சம்மாளிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகராறில் பஞ்சம்மாளை பாண்டி கட்டையால் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த சிந்துபட்டி காவல் நிலைய போலீசார் பஞ்சம்மாளின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு பாண்டியை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
