குமரி மாவட்டத்தில் கடந்த (மே)15_ம் தேதி தொடங்கிய மழை தொடர்ந்து பல இடங்களில் சாரல் மழையாகவும், சில இடங்களில் கன மழையாகவும் பெய்து வரும் சூழலில் மலையோர பகுதிகளிலும் கன மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா பகுதியான திற்பரப்பு அருவியில் மழை நீர் ஆர்ப்பரித்து பாய்ந்து வரும் நிலையில் நேற்று (மே_18)ம்தேதி மதியம் வரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் வெள்ளத்தின் வருகை அதிகரித்த நிலையில், குமரி மாவட்டத்தின் மற்றொரு பகுதியான பூதப்பாண்டி அருகே கால்வாயில் பலர் குளித்துக்கொண்டு இருந்த போது திடீரென காட்டாற்று வெள்ளம் வேகமெடுத்து வந்த நிலையில், கால்வாயில் குளித்துக்கொண்டு இருந்தவர்களை காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்ற நிலையில் பொது மக்கள் 3_பேரை மீட்டபோதும். கால்வாயில் குளித்துக்கொண்டு இருந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர், சென்னையை சேர்ந்த ரியாஸ் கான் (62) மரணம் அடைந்தார். பூதப்பாண்டி காவல்துறையினர் மரணம் அடைந்த அரசு ஊழியர் உடலை கை பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் ஆட்சியர் ஸ்ரீதர் எதிர் வரும்(மே 21)_ம் தேதி வரை எந்த நீர்நிலைகளில், அருவியில் எவரும் குளிக்க செல்ல வேண்டாம் என ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.