குடிபோதையில் காரை ஒட்டியதால் கார் கண்மாய்க்குள் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் உயிர் தப்பினர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள புல்லக்கவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜேஷ், நண்பர் ராஜ்குமார் உட்பட நான்கு பேருடன் ஏழாயிரம் பண்ணைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
காரை ராஜேஷ் ஓட்டி சென்றார். அப்போது சிவசங்குபட்டி செல்லும் வழியில், வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை மீறி தண்ணீர் இல்லாத குளத்தில் கார் நிலைதடுமாறி விழுந்தது. உடனடியாக ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .

தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனே விரைந்து கண்மாயில் கிடந்த காரை பத்திரமாக மீட்டனர். காரில் இருந்த நாலு பேரையும் சிறிய காயத்துடன் மீட்கப்பட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து ஏழாயிரம் பண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஹரிராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முதல் கட்ட விசாரணையில் குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது.




