சென்னையில் கடந்தாண்டு ரூ.12.7 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பாக 2021ல் 438 வழக்குகள் பதிவு, 2022ல் 670 வழக்கு பதிவு, 1022 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2021ல் 5,000 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு 52,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ஏவும் தெரிவித்துள்ளது.