போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இரத்ததான முகாமில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல் உதவி ஆணையாளர் பங்கேற்றனர்.
சென்னை வில்லிவாக்கம் காந்தி தெருவில் அமைந்துள்ள அவர் லேடி வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியில் ஜி கே பிரதர்ஸ் அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் கோல்டன் போர்ட் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஜி.கே. பிரதர்ஸ் அறக்கட்டளை தலைவரும் சமூக சேவகருமான ஆர்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிஅழகன், அண்ணாநகர் 8வது மண்டல குழு தலைவர் கூ.பி. ஜெயின் மற்றும் வில்லிவாக்க சரக காவல் உதவி ஆணையாளர் சிதம்பரம் முருகேசன், 95வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுதா தீனதயாளன், 55வது வார்டு மாமன்ற உறுப்பினர் தாஹா நவீன், அரிமா சங்க மூத்த நிர்வாகி வரதராஜன் ஆகியோர்கள் கலந்து கொண்டு இரத்தானம் செய்த இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் சரக காவல் உதவி ஆணையாளர் சிதம்பர முருகேசன் சிறப்புரை ஆற்றினார்.

இந்த முகாமில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் ஜி.கே பிரதர்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
