பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகள் தற்காலிகமாக Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 19″ஆம் தேதி பிரதமர் மோடி கோவை கொடிசியாவில் நடைபெற உள்ள இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை துவக்கி வைக்க வருகை புரிய உள்ளார். அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடி வேளாண் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க உள்ளார்.

விமான மூலம் கோவை வரும் பிரதமருக்கு விமான நிலைய பகுதி மற்றும் கொடிசியா சாலையில் இருபுறங்களிலும் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சாலையின் இருப்புறங்களிலும் பேரிகேடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கொடிசியா வளாகத்திற்குள்ளும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். கொடிசியா வளாகம் முழுவதும் தற்பொழுது காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவை விமான நிலையம் கொடிசியா சாலை கொடிசியா வளாகம் முழுவதும் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் 19ம் தேதி போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் சில பகுதிகள் Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளன. சிங்காநல்லூர்,SIHS காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா உள்ளரங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், சித்ரா, பீளமேடு, சரவணம்பட்டி, லட்சுமி மில்ஸ், ராமநாதபுரம் மற்றும் பந்தய சாலை ஆகிய பகுதிகள் தற்காலிகமாக Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் (17.11.2025) மாலை 7 மணி முதல் நாளை 19.11.2025 தேதி மாலை 7 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







; ?>)
; ?>)
; ?>)