• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உலக நாடுகளுக்கு செல்லும் “த்ரிஷயம்” !

மோகன்லால், மீனா நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம், ’த்ரிஷயம்’. தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ’பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதுமட்டுமின்றி இந்தப் படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்ப்பால்,இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் கடந்த சில மாதங்களுக்கு இயக்கி, படகுழுவினர் ஓடிடி-யில் வெளியிட்டனர். அதுவும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இரண்டாம் பாகமும் மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட இருக்கிறது.

இந்நிலையில் இப்போது இந்தோனேசியாவில் ’த்ரிஷ்யம் முதல் பாகம்’ படம் ரீமேக் ஆகிறது. இதை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்துள்ளார். இந்தோனேசிய மொழியில் ரீமேக்காகும் முதல் மலையாள திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.