• Sat. May 11th, 2024

திரௌபதி முர்மு வெற்றியை கொண்டாட தயாராகும் அவரது சொந்த ஊர் மக்கள்…

Byகாயத்ரி

Jul 21, 2022

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி அடுத்த ஜனாதிபதி ஆக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வாறு அவர் வெற்றி பெற்றால் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற சிறப்பை அவர் பெறுவார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியானதும், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி வெற்றியை அவரது சொந்த ஊரில் பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதாவது தேர்வு முடிவுகள் வெளியானதும் அவரது சொந்த ஊரான ஒடிசாவின் ராயரங்பூரில் விநியோகிக்க 50,000 லட்டுகள் தயாராகி வருகிறது. இவர்கள் அனைவரும் இணைந்து முர்முவின் வெற்றியை மாபெரும் ஊர்வலம் நடத்திக் கொண்டாட உள்ளனர். இதில் ஒடிசா பழங்குடிகளின் நடன இடம் பெற உள்ளது. இதற்காக பல கலைஞர்களும் ராய்ரஙபூர் வந்து சென்று சேர்ந்துள்ளனர்.

இதனையடுத்து ராய்ரங்பூரின் பாஜக பிரிவினர் தனியாக வெற்றி கொண்டாட்டம் நடத்த உள்ளனர். பா. ஜனதா தரப்பில் ஊர்வலம் நடத்திய அனைவருக்கும் இனிப்புகள் வழங்க 20,000 லட்டுகள் தயார் செய்து வருகின்றனர். திரௌபதி வெற்றி பெற்ற பின் அவரை வாழ்த்திட ஓடிசா முழுவதிலும் நூற்றுக்கணக்கான பெரும் பாதாகைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. முர்முவின் வெற்றியை டெல்லியிலும் பாஜக உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகிறது. அங்குள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் பாஜக அலுவலக அமைந்துள்ள பந்த் மார்க்கின் சாலைகளிலும் கட்சித் தலைவர்கள் அணிவகுத்து சென்று வெற்றியை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *