இராஜபாளையம் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. முன்னதாக யாக பூஜைகள் நடைபெற்று காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு அபிஷேகங்கள் நடைபெற்று கொடி ஏற்றப்பட்டது .

இன்று முதல் பத்து நாள் திருவிழா வரை நாள்தோறும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் சப்ரத்தில் சாமி எழுந்தருளி வீதி உலா நடைபெறும் முக்கிய நிகழ்வான பூக்குழி 13ஆம் தேதி ஞாயிற்று கிழமை மாலை நடைபெறும் இந்த பூக்குழி திருவிழாவில் இராஜபாளையம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளன பொதுமக்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். விழா ஏற்பாடுகளை தலைவர் ஏ கே டி கிஷ்ணமராஜு மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.