• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!

ByA.Tamilselvan

Apr 1, 2023

இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் இந்தியாவில் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இன்று ஏப்ரல் 1 ஆம் தேதி என்பதால், விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.76 குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் 2192.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் அதிரடியாக 351 ரூபாய் உயர்ந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.