சென்னை அடுத்த தாம்பரம் இரும்புலியூர் ஜி எஸ்.டி சாலையில் பார்வதி மருத்துவமனையின் அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு தொடக்க விழா பார்வதி மருத்துவமனையின் நிறுவனர் முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது.

தொடக்க விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மேயர் வஸந்தகுமாரி, துனை மேயர் காமராஜ் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவசர மருத்துவ சிகிச்சை பிரிவை பார்வையிட்டனர். இதில் மாமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, சேகர் உட்பட பார்வதி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிறுவனர் முத்துகுமார் பேசுகையில் பார்வதி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு உயிர் காக்கும் சேவையை தொடங்கியுள்ளது. அவசர பிரிவில் வருபவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கபடும் இது எங்கள் சேவையில் ஒரு மைல்கல் ஆகும் எனவும் கஷ்டபடுபவர்களுக்கு எந்த வசதியும் இல்லையெனில் முழுவதும் இலவசமாக சிகிச்சை செய்யபடும் எனவும் இதுபோன்ற அனைத்து மருத்துவமனைகளும் அவசர சிகிச்சை பிரிவு தொடங்னால் அவசர காலங்களில் அனைத்து உயிர்களும் பாதுக்காகபட ஒரு சிறந்த முயற்ச்சி என்றும் சிறந்த அனுபவமிக்க மருத்துவர்கள் பார்வதி அவசர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர் என தெரிவித்தார்.