புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி இலுப்பூர் பேரூராட்சி உட்பட்ட ஆலத்தூர் இடையபட்டி பிரிவு சாலையில் புதிய பயணியர் நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்தது, இன்று மாலை அந்த புதிய பயனியர் நிழற்குடையை முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பொதுமக்கள் முன்னிலையில் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் சுப்பையா, நகர செயலாளர் சத்யா மணிகண்டன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் குருபாபு உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெண்கள் உடனிருந்தனர்.




