திருநள்ளாற்றில் பாஜக சார்பில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
சட்ட மேதை டாக்டர் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாஜக சார்பில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை ஒரு வார விழாவாக கொண்டாடப்பட்டது. இதன் நிறைவு நாளான இன்று காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார், முன்னாள் துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு அம்பேத்கர் குறித்து சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் சாதனை பெற்ற பட்டியலின மக்களை கவுரவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துப்புரவு பணியார்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் பாஜக துணைத் தலைவர் வி.எம்.சி.கணபதி, பாஜக மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம் மாவட்ட தலைவர் முருகதாஸ், பட்டியலணி தலைவர்கள் கஜேந்திரன், கார்த்திக், மணியம்மை உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.