அவனியாபுரம் பகுதியில் டி பி ஐ முன்னாள் தலைவர் மலைச்சாமி அவர்களை நினைவு தினத்தை முன்னிட்டுவிடுதலை சிறுத்தைகளின் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது –

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்போரூர்சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.
சொன்னதாக கட்டிடத்தில் நடைபெறும் நூலகம் மற்றும் கண்காட்சி கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கூருகையில்,

மறைந்த டிபியை தலைவர் திரு மலைச்சாமி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைவர் தொல் திருமாவளவன் உத்தரவின் பேரில் தலைவர் மலைச்சாமி அவர்களின் மறைவு தின நினைவேந்தல் விழாவில் கலந்து கொண்டேன்.
மலைச்சாமி அவர்களின் மணிபண்ட வேலைகள் முடிவு வரும் தருவாயில் உள்ளன இங்கு நூலகம் மற்றும் கண்காட்சி சமுதாய பணிகள் குறித்து நிகழ்வுகளுக்காக மண்டபங்கள் தயாராகி வருகிறது.
பணிகள் முடிவடைந்து வரும் டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு எழுச்சித் தமிழர் தலைவர் தலைமை திறப்பு விழா நடைபெறுகிறது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜாதிய வன்கொடுமைகள் குறித்த கேள்விக்கு?
மிகவும் வருத்தமான சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே நடைபெற்று வருகிறது குறிப்பாக பல நூறு வருடங்களுக்கு முன்பாகவே இத்தகைய துன்பியல் சம்பவங்கள் நடைபெறுகிறது.

இதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும் எதிர்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நிகழாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜாதியை வன்கொடுமைகள் இங்கு மட்டுமல்ல வளர்ந்த நாடான லண்டனில் கூட நடைபெறுகிறது 2010 ஆம் ஆண்டு லண்டன் பாராளுமன்றம் சமூககொடுமைகளுக்கு எதிராக சட்டவியற்றி சட்டம் இயற்றி பாலினம் மதம் உள்ளிட்ட எந்தவித பாகுபாடும் இன்றி செயல்பட வேண்டும் என கூறினாலும் அங்கு வாழும் இந்தியர்களின் மத்தியில் ஜாதிய பாகுபாடு அதிகரித்து அதனால் அதிகம் பாதிப்படைத்து வருகின்றனர். இது குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள எழுச்சித்தமிழர் லண்டனில் கலந்து கொண்டு 2010ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து ஜாதிய கொடுமைகளுக்கும் மக்கள் பாதிப்படையாமல் தடுக்க வேண்டும் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கூறினார்.