சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே நேற்று நள்ளிரவு கொல்லங்குடி ஆலடி கண்மாய் வாய்க்கால் பகுதியில் இரட்டைக் கொலை நடந்துள்ளது.
பனங்குடி மஞ்சுவிரட்டில் மாடு பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டதில் இருந்த முன் விரோதத்தால் அண்ணன் தம்பி இருவரை எட்டு பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிவகங்கை அருகே கொல்லங்குடி கல்லணை என்ற பகுதியில் நேற்று நள்ளிரவு எட்டு பேர் கொண்ட கும்பல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளம் ஆண்டிச்சாமி மகன்கள் சுபாஷ், ஜெயசூர்யா ஆகிய இருவரை கொலை செய்துள்ளனர். இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் உடலை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இறந்த இருவரும் அண்ணன் தம்பிகள். கடந்த 22.06.24 தேதி கல்லல் அருகே பணங்குடியில் மஞ்சுவிரட்டு நடந்தபோது அவிழ்த்து விட்ட மாட்டை பிடிப்பதில் இரு தரப்பினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும். இதில் கோபத்தில் முன் விரோதத்தில் மனதில் வைத்து நேற்று நள்ளிரவு மூன்று இரு சக்கர வாகனத்தில் காளையார்கோவில் அருகே கொல்லங்குடி பகுதியில் உள்ள ஆர்எஸ் .பதிகாட்டுக்குள் மஞ்சுவிரட்டு மாடு வளர்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து சுபாஷ்
ஜெயசூர்யா மற்றும் 3 நண்பர்களுடன் இருந்த பொழுது மஞ்சுவிரட்டில் நடந்த முன் விரோதத்தால் ஆயுதங்களால் அண்ணன் தம்பி சுபாஷ், ஜெயசூர்யா ஆகிய இருவரை வெட்டி கொலை செய்து விட்டு மற்ற மூன்றுபேரை வெட்ட முற்படும் பொழுது தப்பி ஓடிவிட்டனர் சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய ராஜேஷ், நவீன், ஆகியோர் காளையார்கோவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரனை செய்து வருகின்றனர்.
மஞ்சுவிரட்டில் மாடு அவுத்து விட்டதில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் தம்பி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.