• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

ByKalamegam Viswanathan

Apr 29, 2023

சோழவந்தானில் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்
மதுரை மாவட்டம்.சோழவந்தான் தொகுதி திமுக சார்பாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். வெங்கடேசன் எம் எல் ஏ முன்னிலை வகித்தார். பெரிய மாடு பிரிவில் 9 ஜோடிகளும் சிறிய மாடு பிரிவில் 20 ஜோடிகளும் கலந்து கொண்டன போட்டியின் தூரம் சோழவந்தான் முதல் தேனூர் வரை 8 கிலோமீட்டர் நிர்ணயிக்கப்பட்டது போட்டியின் முடிவில் அவனியாபுரம் எஸ் கே ஆர் கண்ணன் சார்பாக திருமலை எம் ஆர் கே கண்ணன் முதலிடத்தையும் இரண்டாவது பரிசினை புதுப்பட்டி சின்னச்சாமி நினைவாக சோழவந்தான் இன்ஸ்பெக்டர்.சிவபாலன் மூன்றாவது பரிசு வேலம் குளம் கண்ணன் நான்காவது பரிசு புதுப்பட்டி கே எ அம்பாள் காளைகளும்வெற்றி பெற்றது. சிறிய மாடு பிரிவில் 20 ஜோடிமாடுகள் கலந்து கொண்டு முதல் நான்கு பரிசுகளை பெற்றது. வெற்றி பெற்ற மாடுகளுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை பரிசுகளும் கேடயமும் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர்கள் ஜெயராமன் பால்பாண்டியன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன்மாறன் பால ராஜேந்திரன் தன்ராஜ்,பரந்தாமன், துணைச் செயலாளர் சாந்தி ராஜா பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் செயலாளர் வழக்கறிஞர்சத்திய பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் மேலக்கால் சுப்பிரமணி, வசந்த கோகிலா சரவணன், ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டி, மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், விவசாய அணி நிர்வாகி வக்கீல் முருகன் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் அலெக்ஸ்.வாடிப்பட்டி பிரகாஷ் பேரூராட்சி துணைத் தலைவர்கள் லதா கண்ணன், வாடிப்பட்டிகார்த்திக்,பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி,ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், முள்ளிப்பள்ளம் ஊராட்சி கழகச் செயலாளர் கேபிள் ராஜா, தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன்.மாணவரணி எஸ் ஆர் சரவணன் மேலக்கால் பன்னீர்செல்வம். மேலக் கால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்தாண்டி. ராயபுரம் சிறுமணி திருவாளவாயநல்லூர் சகுபர் சாதிக். ஊத்துக்குளி ராஜா சின்னமணி சோழவந்தான் மில்லர்.மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் கலைக்கழக நிர்வாகிகள் உட்பட.பலர் கலந்து கொண்டனர்.