• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தூர்தர்ஷன் லோகோ காவி நிறத்தில் மாற்றம்

Byவிஷா

Apr 20, 2024

மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் லோகா காவி நிறத்தில் மாறியிருப்பது எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடக வல்லுநர்கள் மத்தியில் அதிருப்தியையும், விமர்சனத்தையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., கூறுகையில்,
அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் காவி மயமாக்கும் பணி நடந்து வருகிறது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி ஷர்டி அணிகின்றனர். ஜி 20 லோகோவிலும் காவி நிறம் காணப்பட்டது. இது சர்வாதிகார ஆட்சியின் ஒரு பகுதியாகும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரசார் பார்தி தலைமை நிர்வாக அதிகாரி, “இது ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. ஜி 20 உச்சி மாநாட்டிற்கு முன்பு தூர்தர்ஷனின் லோகோவை அதே நிறத்தில் புதுப்பித்தோம். ஒரே குழுவைச் சேர்ந்த இரண்டு செய்தி சேனல்களும் இப்போது ஒரே தோற்றத்தைப் பின்பற்றுகின்றன என்று அவர் கூறினார்.