• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இஸ்ரேலிய பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

ByP.Kavitha Kumar

Mar 6, 2025

அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதத்துக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19-ம் தேதி முடிவுக்கு வந்தது. போரில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர். போர்நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

இந்த நிலையில், தங்களிடம் மீதமுள்ள அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.